ஒருபக்கம் பிசியாக நடித்துக் கொண்டே இன்னொரு பக்கம் பட தயாரிப்பிலும் கால் வைத்துள்ளார் நடிகர் துல்கர் சல்மான்.. நண்பர்கள் ‛வே பார்’ என்கிற நிறுவனத்தை துவங்கி படம் தயாரிக்க, ஆரம்பித்து தற்போது தொடர்ந்து ஐந்து படங்களை ஒரே நேரத்தில் தயாரித்து வருகிறார் துல்கர் சல்மான். இவருடன் பல படங்களில் இணைந்து காமெடி நடிகராக நடித்த ஜேக்கப் கிரிகோரி என்பவரை கதாநாயகனாக வைத்து ‘மணியறையில் அசோகன்’ என்கிற படத்தை தயாரித்து முடித்துவிட்டார் துல்கர் சல்மான்.
தற்போது இவர் நடித்துவரும் குறூப் மற்றும் சுரேஷ்கோபி, ஷோபனா ஆகியோருடன் இணைந்து நடித்துவரும் இன்னொரு படமும் படப்பிடிப்பில் இருக்கின்றன இதையடுத்து ரோஷன் ஆண்ட்ரூஸ் டைரக்ஷனில் துல்கர் சல்மான் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ள படமும் நடிகர் ஜாய் மேத்யூ டைரக்சனில் நடிக்கவுள்ள அரசியல் படமும் இவரது நிறுவனத்தின் மூலம் அடுத்தடுத்த தயாரிப்பாக உருவாக இருக்கின்றன. அந்தவகையில் விரைவில் மிகப்பெரிய தயாரிப்பாளர்கள் பட்டியலிலும் துல்கர் சல்மான் இடம் பிடித்துவிடுவார் என நம்பலாம்.

