தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான ‘டாக்சிவாலா’ படம், வெளியாவதற்கு முன்பே, பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது. இதற்கிடையில், படம் வெளியாக தீர்மானிக்கப்பட்ட நவ., 17க்கு முன்பாகவே, தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் மூலம், முழு படமும் வெளியானது.
இதையடுத்து, படக் குழுவினரும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும், மிகுந்த கவலைக்குள்ளாகினர். இருந்தபோதும், திட்டமிட்டபடியே படத்தை வெளியிட்டனர். படம் எதிர்பார்க்கப்பட்டது போலவே, பிளாக் பஸ்டர் வெற்றி பெற்றுள்ளது என, தற்போது, படக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக, கடந்த 23ல், ஐதராபாத்தில், நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர், படக் குழுவினர். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, நடிகர் விஜய் தேவரகொண்டா பேசியதாவது:
நான் திரும்பி வருவேன் என்று சொன்னால் நிச்சயமாக வருவேன். எங்கள் படத்தை இணையத்தில் கசிய விட்ட ராக்கர்ஸை எல்லோரும் மன்னித்து விடுங்கள். எங்களுடன் மோதாதீர்கள். நீங்கள் லீக் செய்தும்கூட படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆகியிருக்கிறது. நல்ல படம் என்றால், கட்டாயம் படம் வெற்றியடையும்.
இவ்வாறு அவர் பேசினார்.