செல்வராகவனும், சூர்யாவும் முதன் முதலாக இணைந்துள்ள என்.ஜி.கே. படம் வருகிற 31-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது. அமெரிக்கா நியூசிலாந்த், பிரான்ஸ், தென்கொரியா என்று பெரும்பாலான வெளிநாடுகளிலும் மே 31-ஆம் தேதி அன்றே இந்த படம் வெளியாக இருக்கிறது.
இது ஒருபக்கம் இருக்க, என்ன காரணத்தினாலோ, சூர்யா இதுவரை நடித்த படங்கள் மீது ஏற்பட்ட எதிர்பார்ப்பை விட இந்தப்படத்துக்கு எதிர்பார்ப்பு குறைவாகவே உள்ளது. முன்பதிவும் துவங்கியதே தாமதம், சென்னை தவிர்த்து பல ஊர்களில் மந்தமாகவே உள்ளது.
விக்னேஷ்சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படம் சரியாக அமையாததால் ஏற்பட்ட எதிர்வினையாகவே இதை திரையுலகினர் பார்க்கின்றனர். ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மந்தமாக இருந்தாலும், வியாபாரத்தில் என்.ஜி.கே. குறைவைக்கவில்லை.
இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளது. டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் வாங்கியுள்ளது.