ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு யாத்ரா என்ற பெயரில் படமாகிக் கொண்டிருக்கிறது. மகி வி.ராகவ் இயக்கும் இந்த படத்தில் ஒய்.எஸ்.ஆர் வேடத்தில் மலையாள நடிகர் மம்முட்டி நடிக்கிறார்.
இந்த படத்தில் மம்முட்டியின் நடிப்பு குறித்து இயக்குனர் மகி வி.ராகவ் கூறுகையில், இந்த படத்திற்காக மம்முட்டி ரொம்பவே மெனக்கெடுகிறார். ஒய்.எஸ்.ஆராகவ மாறி விட்டார். அவரது அர்ப்பணிப்பு மகத்தானது. தெலுங்கு டயலாக்கை மலையாளத்தில் எழுதி மனப்பாடம் செய்து கொண்டு நடிக்கும் அவர், ஒய்.எஸ்.ஆரை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். அவருக்கு நான் நடிப்பு சொல்லிக் கொடுக்கவில்லை. அவராகவே இயல்பாக நடிக்கிறார். நான் அவருக்கு ஒத்துழைப்பு மட்டுமே கொடுத்து வருகிறேன் என்கிறார்.