நடிகர்கள் விஜய் மற்றும் அஜித்தின் ரசிகர்களின் டுவிட்டர் சண்டைகள் உலக புகழ் பெற்றவை. விஜய் படத்தை வைத்து அவரது ரசிகர்கள் ஏதாவது டிரெண்ட் செய்தால், உடனடியாக அஜித் ரசிகர்களும் ஏதாவது ஹேஷ்டேக் போட்டு டிரெண்டாக்குவர். இந்த மோதல் போக்கு கடந்த சில ஆண்டுகளாக மிக மோசமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் ஒன்றாக இணைந்து, #Unrivalledtamilactors எனும் ஹேஷ்டேகை டிரெண்டாக்கியுள்ளனர். அதாவது நிகரற்ற தமிழ் நடிகர்கள் என பொருள்படும் இந்த ஹேஷ்டேக், இருவரது ரசிகர்களையும் ஒன்றிணைத்துள்ளது. இந்த நல்ல மாற்றம் இப்படியே தொடர வேண்டும் என நெட்டிசன்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

