ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்து 2015ம் ஆண்டு வெளிவந்த படம் ‘ஐ’. விக்ரமின் கடுமையான நடிப்பிற்கு இப்படம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது. அந்தப் படத்திற்காக விக்ரம் தன் உடல் எடையை கடுமையாகக் குறைத்தும், ஏற்றியும் நடித்து ரசிகர்களை வியக்க வைத்தார். வியாபார ரீதியாக இந்தப் படம் வெற்றி என்றும், தோல்வி என்றும் இருவேறு கருத்துக்கள் நிலவுகிறது.
இப்படம் தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. ஆனால், அங்கும் எதிர்பார்த்த அளவில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. தமிழில் இப்படத்தை இந்த ஐந்து வருடங்களில் பல முறை ஒளிபரப்பிவிட்டார்கள். ஆனால், தெலுங்கில் படத்தின் சாட்டிலைட் டிவி உரிமை விற்கப்படாமலே இருந்தது.
சமீபத்தில் இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ஸ்டார் மா டிவி ஐந்து கோடி கொடுத்து வாங்கியுள்ளதாம். படம் வெளியாகி ஐந்து வருடங்கள் கழித்து இவ்வளவு தொகையா என டோலிவுட் வட்டாரங்கள் ஆச்சரியப்படுகிறார்களாம். வரும் ஞாயிறு 26ம் திகதி மாலை 5 மணிக்கு தெலுங்குத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக இப்படம் ஒளிபரப்பாக உள்ளது.