யாருக்கு, யாரால், எப்போது, எங்கிருந்து பிரச்னை கிளம்பும் என்றே தெரியாது. அப்படித்தான், இன்று பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகின்றன. கடந்த ஆண்டு, மங்களூரைச் சேர்ந்த சங்கீத் குமார் என்பவர் திடுமென ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். என்னுடைய அம்மா நடிகை ஐஸ்வர்யா ராய் என்று.
அப்போது அவர் கூறியதாவது: கடந்த 1988ல், நடிகை ஐஸ்வர்யா ராய், செயற்கை கருத்தரிப்பு மூலம் லண்டனில் வைத்து என்னை பெற்றெடுத்தார். அப்போது அவருக்கு வயது பதினைந்து. அதன் பின், 19 ஆண்டுகளுக்குப் பின், தன்னுடைய 34வது வயதில், 2007 ஆம் ஆண்டு, நடிகர் அபிஷேக் பச்சனை அவர் திருமணம் செய்து கொண்டார். என்னையும், என்னுடைய அம்மா ஐஸ்வர்யா ராயையும் எப்படியாவது சேர்த்து வைக்க வேண்டும். என்னுடைய அம்மாவின் பிரிவை நான் ரொம்பவே துன்பமாக உணர்கிறேன். என்னுடைய அம்மாவுடன் தான் வசிக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இது, அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருந்தாலும், இந்த விவகாரம் தொடர்பாக அமிதாப்பச்சன் குடுபத்தினர் பெரிய அளவில் எதிர்வினையாற்றவில்லை. இந்நிலையில், மீண்டும் சங்கீத்குமார் பத்திரிகையாளர்களை அழைத்துப் பேசியிருக்கிறார்.
இம்முறை அவர் கூறியிருப்பதாவது: என்னுடைய இரு வயது வரை, தாத்தா கிருஷ்ணராஜும், பாட்டி பிருந்தாவும் தான் வளர்ந்து வந்தனர். அதன்பின், என்னுடைய அப்பா வடிவேலு ரெட்டி, என்னை, விசாகப்பட்டினத்திற்கு அழைத்துச் சென்று விட்டார். அங்கு தான் வளர்ந்தேன். என்னுடைய பிறப்பு சான்று உள்ளிட்ட என் சம்பந்தப்பட்ட சான்றுகளை உறவினர்கள் தவறுதலாக அழித்து விட்டனர். ஆனாலும், என்னுடைய தாய் ஐஸ்வர்யா ராய் தான். நான் எப்படியும் அவரோடு சேர வேண்டும். அவருடன் தான் நான் இருப்பேன் என கூறியிருக்கிறார்.
இந்தப் பேட்டிக்குப் பின்னும், ஐஸ்வர்யா ராயோ, பச்சன் குடும்பத்தினரோ, எவ்வித கருத்தும் கூறாமல் அமைதியாக இருக்கின்றனர். இதுதான் பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

