ஏய் தில் ஹே முஷ்கில் படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ராய் நடிக்கும் படம் பேனி கான். இவருடன் அனில் கபூர், ராஜ்கபூர் ராவ் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். அதுல் மன்ஞ்ரேக்கர் இயக்க, கிரிராஜ் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் ஐஸ்வர்யா ராயின் பர்ஸ்ட் லுக் தோற்றம் வெளியாகி உள்ளது. அதில் ஐஸ்வர்யா ராய், கருப்பு நிற டாப்பும், மேலே ராணுவ உடையிலான ஜாக்கெட்டும் அணிந்துள்ளார். கருப்பு நிற கூலிங் கிளாஸ், தோளில் ஒரு பேக் என ஸ்டைலாக தோன்றுகிறார். ஐஸ்வர்யா ராயின் இந்த போட்டோ இப்போது இணையதளங்களில் வைரலாகி உள்ளது.