காதலில் சொதப்புவது எப்படி படத்தில் இரண்டாவது நாயகியாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். அதன் பிறகு தீயா வேலை செய்யணும் குமாரு, தமிழ்படம் 2, வீரா, நேர் எதிர் படங்களில் நடித்தார். அழகும், திறமையும் இருந்தும் சரியான வாய்ப்பின்றி இருந்தார்.
இந்நிலையில் ஹிப் ஆப் ஆதி இசை அமைத்து நடிக்கும் நான் சிரித்தால் படத்தின் நாயகியாகி இருக்கிறார். இதனை ராணா என்ற புதுமுகம் இயக்குகிறார். அவனி மூவீஸ் சார்பில் சுந்தர்.சி தயாரிக்கிறார். இந்த படம் ஐஸ்வர்யா மேனனுக்கு அவருக்கு கைகொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

