இந்திய சினிமாவின் சர்வதேச வியாபாரம், தொழில்நுட்ப வளர்ச்சி இவற்றை மையமாக கொண்டு நடக்கும் திரைப்பட விழா, இண்டிவுட் திரைப்பட விழா. தெலுங்கானா அரசின் ஆதரவில் இது நடத்தப்படுகிறது. இதன் 3வது ஆண்டு விழா இன்று(டிச., 1) ஐதராபாத்தில் துவங்குகிறது. இன்று முதல் வருகிற 4ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
200க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்படுகின்றன. இந்திய திரைப்படங்கள் தொடர்பான கருத்தரங்குள், விவாத அரங்கம், வியாபாரம் தொடர்பான ஆய்வரங்கம் நடக்கின்றன. திரைப்படங்களில் வியாபார கண்காட்சியும் நடக்கிறது. இதில் முன்னணி திரைப்பட நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் கலந்து கொள்கிறார்கள். 25 ஆயிரம் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறுதி நாள் அன்று சாதனை படைத்த திரைக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது.