ஏ-1 படத்தை அடுத்து டகால்டி, டிக்கிலோனா ஆகிய படங்களில் நடித்து வரும் சந்தானம், அடுத்த படியாக ஜெயம்கொண்டான் கண்ணன் இயக்கும் படத்திலும் நடிக்கிறார். தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்றுவரும் இந்த படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக இரண்டு நடிகைகள் நடிக்கிறார்கள்.
இந்த படத்திற்காக இரண்டு நாயகிகளை டைரக்டர் கண்ணன் தேடிவந்தபோது, ஏ-1 படத்தில் நடித்த தாரா அலிஷாவிற்கு சந்தானமே சிபாரிசு செய்து ஒப்பந்தம் செய்து விட்டாராம். அதையடுத்து தற்போது ஸ்வாதி என்ற இன்னொரு நாயகியையும் ஒப்பந்தம் செய்துள்ளார்கள்.

