கடந்த 2017ல் பிரபல மலையாள நடிகை காரில் வைத்து கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான நிகழ்வு, மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட பிரபல நடிகர் திலீப், கைது செய்யப்பட்டு சிறையில் இரண்டரை மாத காலம் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமினில் வெளிவந்தார். அதன்பின் இந்த வழக்கு கொஞ்சம் மந்தமாகவே சென்று கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இந்த வழக்கை எர்ணாகுளம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இருந்த இருந்து, சிபிஐ நீதிமன்றத்துக்கு மாற்றி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட நடிகையின் தரப்பில் இருந்து வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்கும் விதமாக, இந்த வழக்கை ஒரு பெண் நீதிபதி விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், அதிரடி திருப்பமாக வரும் ஏப்ரல்-5ஆம் தேதி இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் சிபிஐ நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.