பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் இருந்தே டைட்டில் வின்னராக கருதப்பட்டவர் நடிகர் தர்ஷன் தான். 98 நாட்கள் நிகழ்ச்சியில் இருந்தவர் அதிரடியாக வெளியேற்றப்பட்டு விட்டார். மக்கள் அளித்த குறைவான வாக்குகள் தான் காரணமாகச் சொல்லப்படுகிறது. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பொருத்தவரை மக்கள் எதிர்பாராதது தான் ஆரம்பம் முதலே நடந்து வருகிறது. தற்போது தர்ஷனின் வெளியேற்றமும் அப்படித்தான்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய தர்ஷன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தெரிந்தவர்களிடம் இருந்து அன்பு கிடைப்பது நல்ல விஷயம் தான். ஆனால் தெரியாதவர்களிடம் இருந்து, ஒருமுறைக்கூட பார்க்காதவர்களிடம் இருந்து அன்பு கிடைப்பது எல்லாவற்றிற்கும் மேலான ஒரு உணர்வை தருகிறது.
இன்று என் வாழ்வின் மிகச் சிறந்த நாள். தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என அனைவரிடம் இருந்தும் வாழ்த்துகளும், அன்பும், ஆதரவும் கொட்டுகிறது. என்னை தங்களின் குடும்பத்தில் ஒரு பிள்ளையாக நினைத்து, கடந்த 98 நாட்களாக அன்பும், ஆதரவும் அளித்த அத்தனை பேருக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தர்ஷனின் இந்த பதிவை ஒரு லட்சத்துக்கு அதிகமானவர்கள் லைக் செய்துள்ளனர். உணர்ச்சிப்பூர்வமாக பலர் கமெண்ட் வெளியிட்டுள்ளனர். இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது, மக்கள் மனதில் தர்ஷனுக்கு எப்படிப்பட்ட இடம் கிடைத்துள்ளது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

