Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

என் ……………… தங்கத்துடன் டின்னர் – விக்னேஷ் சிவன்

March 13, 2019
in Cinema
0

தமிழ்த் திரையுலகமும், சினிமா ரசிகர்களும் இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாராவைக் காதலர்கள் என்றே சொல்லி வருகிறது. ஆனால், இருவரும் இதுவரையில் தங்களைக் காதலர்கள் என்று சொல்லிக் கொள்ளவேயில்லை. ஆனால், அடிக்கடி சமூக வலைத்தளங்களில் கொஞ்சம் நெருக்கமான புகைப்படங்களைப் பகிர்ந்து கமெண்ட்டுகளில் பலருடைய பொறாமையை சம்பாதித்து வருகிறார்கள்.

கடந்த மார்ச் 8ம் தேதி பெண்கள் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட வாழ்த்தில் கூட இயக்குனர் விக்னேஷ் சிவன், முதலில் நயன்தாராவைப் பற்றி, “நீ என் உலக அழகியே, உன்னை போல் ஒருத்தி இல்லையே…” என ‘ஜெர்ஸி’ படத்தில் அவர் எழுதிய பாடல் வரிகளை எழுதிவிட்டுத்தான் மகளிர் தின வாழ்த்துக்களை நயன்தாராவின் புகைப்படத்துடன் கூறினார்.

நேற்று, சேலையில் ஒரு ரொமான்டிக் லுக்குடன் இருக்கும் நயன்தாராவின் புகைப்படத்தைப் பதிவிட்டு “நீண்ட நாட்களுக்குப் பிறகு என்………….தங்கத்துடன் டின்னர்” என எழுதியுள்ளார். தங்கத்திற்கு முன்பாக சில கட்டங்களை மட்டும் போட்டு அதில் நம் கற்பனைக்கு ஏற்றவாறு எதையாவது நிரப்பிக் கொள்ள விட்டுவிட்டார் போலும்.

ம்ம்ம்ம்… ‘நானும் ரௌடிதான்’ படத்தின் ‘தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே…’ பாடல்தான் ஞாபகம் வருகிறது. கவிதை எழுதியே நயன்தாராவைக் கவர்ந்தவர் என்றுதான் விக்னேஷ் சிவனை சொல்லத் தோன்றுகிறது.

Previous Post

ஒரே நாளில் ஒரே பெயரில் இரு படங்களின் அறிவிப்பு

Next Post

மைத்திரி தரப்புடன் முதலாவது கட்டப் பேச்சுவார்த்தை இன்று

Next Post

மைத்திரி தரப்புடன் முதலாவது கட்டப் பேச்சுவார்த்தை இன்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures