செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் என்ஜிகே படம் தீபாவளிக்கே வெளியாக வேண்டியது. செல்வராகவனுக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் படப்பிடிப்பு தாமதமானது. அதனால் கே.வி.ஆனந்த் படத்தில் நடிக்கத் தொடங்கினார் சூர்யா.
இதன்காரணமாக என்ஜிகே படப்பிடிப்பு மேலும் தாமதமானது. இதனால் அப்படத்தை எதிர்பார்த்து ஏமாந்து போன சூர்யாவின் ரசிகர்கள் படம் குறித்த தகவல்களை அப்படம் சார்ந்தவர்களின் சமூக வலைதள பக்கத்திற்குள் சென்று கேட்ட வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில், தற்போது இசையமைப்பாளர் யுவன், டுவிட்டரில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில், சித் ஸ்ரீராம் பாடிக்கொண்டிருக்கிறார். அதன்கீழ் என்ஜிகே என்று குறிப்பட்டுள்ளார்.
இயக்குனர் செல்வராகவனும் டுவிட்டரில், யுவனும், சித் ஸ்ரீராமும் என்ஜிகேவுக்காக ரெக்கார்ட்டிங் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளார்.