எனது ஹீரோ பட இயக்குனர் மித்ரன் தான் என, பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இரும்புத்திரை படத்தில், நவீனத்தின் அழிவுகளை இவ்வளவு அழகாக இவரைத்தவிர வேறு யாராலும் சொல்ல முடியாது என்று புகழ்ந்துள்ளார். வைரமுத்து மீது கூறிய குற்றச்சாட்டால் வாய்ப்புகள் இல்லாமல் இருந்த சின்மயி ஹீரோ படத்தில் டப்பிங் பேசி உள்ளார். இப்படத்தின் பாடல் மற்றும் முன்னோட்டம் வெளிவந்தது. இதையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் பி.எஸ்,மித்ரன் மற்றும் தயாரிப்பாளரை பெருமையாக கூறியுள்ள சின்மயி, இயக்குனர் மித்ரன் தான் எனது ஹீரோ என்றும் பதிவிட்டுள்ளார்.
இரும்புதிரை படத்தை பார்த்து வெளியே வந்ததும், தனது போனை பார்த்து பயப்படாதவர்களே இருக்க முடியாது என்று கூறியுள்ளார். அந்த அளவுக்கு நவீன வளர்ச்சியால் நாம் சந்தித்து வரும் பிரச்சினைகள், அதனால் ஏற்படும் அழிவுகளை இவ்வளவு அழகாக இவரைத்தவிர வேறு யாராலும் சொல்ல முடியாது அந்த அளவுக்கு அழகாக சொல்லி இருப்பாரு இயக்குனர் மித்ரன் என்று ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளியுள்ளார். இது வெறும் பட விளம்பரத்துக்காக சின்மயி போட்ட ட்விட்டாக மட்டும் இருக்காது என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்
வைரமுத்து மீது இவர் கூறிய குற்றச்சாட்டிற்கு பின் பலரும் துணிச்சலுடன் புகார் தெரிவிக்க முன் வந்தனர். பலர் இவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர், பலர், இத்தனை நாள் புகார் தெரிவிக்காமல் இப்போது வைரமுத்து மீது புகார் தர என்ன காரணம் என்று, பலர் சின்மயி கூறிய குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பும் தெரிவித்தனர். அந்த பிரச்சனைகளின் தாக்கத்தால் தனது பணிகளை கைவிட்ட சின்மயி நீண்ட நாட்களுக்கு பிறகு தனது பணிக்கு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயன், அர்ஜீன், கல்யாணி ப்ரியதர்ஷன், ரோபோ சங்கர் மற்றும் அபய் தியோல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். படம் டிசம்பர் 20 வெளியாக உள்ளது

