ரஜினி நடித்த பேட்ட படத்திற்கு இசையமைத்த அனிருத் இப்போது தர்பார் படத்திற்கும் இரண்டாவதுமுறையாக இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஆடியோ விழாவில் அனிருத் பேசுகையில், நான் 3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானேன்.
அந்த படத்திற்கு சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தபோதும் பின்னர் பெரிய ஹீரோக்களின் படங்கள் கிடைக்கவில்லை. அப்படியொரு வாய்ப்பை கத்தி படத்தில்தான் எனக்கு கொடுத்தார் ஏ.ஆர்.முருகதாஸ். அதை யடுத்து இப்போது தலைவரின் தர்பார் படத்திற்கும் என்னை இசையமைக்க வைத்துள்ளார். அதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த தர்பார் படத்தின் சும்மா கிழி கிழி பாடல் மிகப் பெரிய ஹிட்டடித்துள்ளது. அதேபோல் மற்ற பாடல் களையும் பாடலாசிரியர் விவேக் சிறப்பாக எழுதியுள்ளார். முக்கியமாக இந்த படத்திற்கான ஒவ்வொரு பாடலையும் கம்போஸ் செய்து முடித்தபிறகு என்னை யுமறியாமல் ஒரு ஆனந்த கண்ணீர் வந்தது. காரணம் உலகின் ஒரு மிகப்பெரிய நடிகரின் படத்திற்கு இசை யமைக்கிறோமே என்கிற உணர்வுதான் அது.
இந்த பொங்கல் நாளில் தர்பார் படம் ரசிகர்களுக்கான மிகப்பெரிய ட்ரீட்டாக இருக்கும். அன்றும் இன்றும் என்றும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிதான் என்று பேசினார் அனிருத்.

