சாதாரணமாகவே ஒரு படத்தில் இரண்டு நாயகிகள் நடித்தாலே இயக்குநர்களுக்கு தலைவலி என்று சொல்வார்கள். என்னை விட அந்த நடிகைக்கே அதிக காட்சிகள் கொடுத்து விட்டீர்கள் என்று ஆளாலுக்கு கொடி பிடிப்பார்கள். அதன்காரணமாக, படப்பிடிப்பு தளங்களில் இரண்டு நாயகிகள் என்றால் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் எதிரும், புதிருமாகவே காணப்படுவார்கள்.
ஆனால், இந்த விசயத்தில் வரலட்சுமி முற்றிலும் மாறுபட்டவராக இருக்கிறார். சில படங்களில் நாயகியாக நடித்து வரும் இவர், பல படங்களில் வித்தியாசமான கேரக்டர்களிலும் நடிக்கிறார். இதுகுறித்து வரலட்சுமி கூறும்போது, ஒரே படத்தில் மற்ற நடிகைகளுடன் இணைந்து நடிக்கும்போது அந்த நடிகைக்கு என்னை விட பெரிய கேரக்டராக இருந்தாலும் அதை நினைத்து வருத்தப்பட மாட்டேன்.
இயக்குநர் சொன்னபடி எனது கேரக்டரை கொண்டு செல்கிறாரா என்பதை மட்டுமே கருத்தில் கொள்வேன். இதில் இன்னொரு நடிகையைப்பார்த்து பொறாமைப்பட்டு, போட்டியாக நினைத்து என்ன நடக்கப்போகிறது.
எனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்வேன். அதில் எனது முழுக்கவனமும் இருக்கும். அதன்காரணமாகவே என்னுடன் இணைந்து நடிக்கும் அனைத்து நடிகைகளுடனும் நான் தோழியாக இருக்கிறேன் என்கிறார் வரலட்சுமி.
