முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது பதவியை ராஜினாமா செய்வது ஆட்சிக்கு நல்லது என்று சுப்ரமணியசாமி கூறியுள்ளார்.
சசிகலா, தினகரனை தீவிரமாக ஆதரித்து வருகிறார் சுப்பிரமணியன் சாமி. இது தொடர்பாக தொடர்ந்து ட்விட்டரில் பதிவுகளைப் போட்டு வருகிறார் சுப்ரமணியசாமி.இந்த நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுப்ரமணியசாமி, தமிழகத்தின் நலனுக்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறினார்.
ஏற்கனவே தனது ட்விட்டர் பக்கத்தில் எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்து விட்டு சபாநாயகர் தனபாலை முதல்வராக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் சுப்ரமணியசாமி.