எம்.எஸ்.ராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் உறங்காப்புலி. இவர் கடைக்குட்டி சிங்கம் படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியவர். அல்ரூபியான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு கே கே ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் மோஷன் போஸ்டரை நடிகர் சூரி தனது டுவிட்டரில் வெளியிட்டிருக்கிறார்.
உலகில் முதன்முறையாக அணை கட்டியவன் தமிழன். முதன்முறையாக தேர்தலை அறிமுகப்படுத்தியவன் தமிழன், ஒவ்வொரு தமிழனும் உறங்காப்புலி என்ற வாசகங்களுடன் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியிருக்கிறது.

