உணவத்தின் சேவைகள் மிக தாமதமாக இருந்ததால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மார்செய் நகரில், ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணி அளவில் குறித்த உணவகத்துக்கு நால்வர் வந்துள்ளனர். உணவகத்தின் சேவைகள் மிக தாமதமாக இருந்ததால் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். பின்னர், 45 நிமிடங்கள் கழித்து, அதே உணவகத்துக்கு திரும்பி வந்த நால்வரில் இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்கள். நிர்வாகியை நோக்கி நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் குறி தப்பியதால் உயிர் ஆபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை. எனினும், நபர் ஒருவர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் தாக்குதல்தாரிகள் உந்துருளி ஒன்றில் தப்பிச்சென்றுள்ளனர். அதன் பின்னர் 9.30 மணி அளவில் உணவக நிர்வாகி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.