மெர்சல் படத்தில் விஜய் ஜோடியாக நடித்த நித்யா மேனன், பிறமொழியில் சில படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நித்யா மேனன் அதிக உடல் எடையுடன் காணப்பட்டார். அவரின் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலானதுடன் சிலர் கிண்டல் செய்தனர்.
இதுப்பற்றி நித்யா மேனன் கூறியிருப்பதாவது… என் உடல் எடை கூடியிருப்பது பற்றி நானே கவலைப் படாத போது நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள். பிடித்ததைச் சாப்பிடுவேன், நிறைய சாப்பிடுவேன்.ஓய்வில் இருந்ததால் உடை எடை கூடிவிட்டது. இப்போது நான் நடித்து வரும் படங்களுக்கு என் உடல் எடை பிரச்சினை இல்லை. அடுத்து ஒரு படத்தில் எடை குறைத்து நடிக்க வேண்டும். அதற்காக எடை குறைக்க இருக்கிறேன். நான் நினைத்தால் நினைத்த நாட்களுக்குள் உடல் எடையை குறைக்க முடியும். குறைத்து காட்டுவேன். என்றார்.

