ஷங்கர் இயக்கத்தில், கமல் நடித்து உருவாக்கப்பட்ட படம் ‘இந்தியன்’. பிரமாதமாக ஓடிய இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. செட் அமைப்பதற்கான பூஜைகள் போடப்பட்டு, படப்பிடிப்பை துவங்குவதற்கான ஏற்பாடுகளில் தயாரிப்புக் குழு வேகமாக ஈடுபட்டுள்ளது.
சென்னையில், மிகப் பிரம்மாண்டமான அரங்கு ஒன்றை வடிவமைத்து, முதல் கட்டமாக அங்கு சூட்டிங் நடத்த, அரங்கு அமைத்து வருகின்றனர். பிரபல கலை நிபுணரான முத்துராஜ் அந்தப் பணியை மேற்கொண்டிருக்கிறார். ஏற்கனவே, ஷங்கரின் இயக்கத்தில் உருவான ‘ஐ’, ‘2.0’ போன்ற படங்களில் பணியாற்றிய முத்துராஜே, இந்தப் படத்திலும் பணியாற்றுகிறார்.
இந்தியன் தாத்தா வேடத்தில் நடிகர் கமல் நடிக்கவிருக்கும் காட்சிகளை உக்ரைன், போலந்து ஆகிய நாடுகளில் படமாக்க, படக்குழு திட்டமிட்டுள்ளது.

