அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து பிரமாண்டமாக வெளியான மெர்சல் படம், வெளியாகும் முன்பே டீசர், டிரைலர், பாடல்கள் என பல பரபரப்புகளை கிளப்பியது.
பிரிட்டனின் நான்காவது தேசிய திரைப்பட விழா – 2018, நடக்கவிருப்பதையொட்டி, சிறந்த படங்கள் பல்வேறு பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில், வெளிநாட்டுப் பட பிரிவிற்கான விருதை தமிழகத்தின் மெர்சல் படம் பெற்றிருக்கிறது.
இதையறிந்ததும், மெர்சல் படக் குழுவினர் பெரும் சந்தோஷம் அடைந்துள்ளனர். இதற்காக சென்னை ஈ.சி.ஆர்., ரோட்டில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் விரைவில் பார்ட்டிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.