ஈராக் நாட்டின் சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பு நடத்த இருப்பதாக குர்திஷ் அமைப்பினர் அறிவித்திருந்த நிலையில், கிர்குக் நகரில் இயங்கிவரும் மதுக்கடையை குறிவைத்து நேற்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் பத்து பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அப்பகுதியில் நிறுத்திவைக்கபட்டிருந்த வாகனங்களும் இந்த தாக்குதலில் சேதமடைந்துள்ளது.
குர்திஷ் அமைப்பினரின் வாக்கெடுப்பை சீர்குலைக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.