விவேகம், மெர்சல் படங்களுக்குப்பிறகு பாரிஸ் பாரிஸ் படத்தில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். இதுதவிர தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்தநிலையில், மும்பை தொழிலதிபருடன் கிசுகிசுக்கப்பட்டு வரும் காஜல், தற்போது இளம் நடிகர் ஒருவரை காதலிப்பதாகவும், அவருடன் அடிக்கடி டேட்டிங் போவதாகவும் செய்தி பரவியுள்ளது.
இந்த செய்தி காஜல் அகர்வாலின் காதுக்கு சென்றபோது, உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளார். என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி நான் பேச மாட்டேன். யாருடனும் டேட்டிங் செல்லவில்லை, திட்டமிட்டு சில வீண் வதந்தியை பரப்பி வருகின்றனர் என்று கூறியுள்ளார்.