இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிகள் மோதிய அதிகாரப்பூர்வமற்ற முதல் டெஸ்ட் போட்டி ‘டிரா’ ஆனது.
இங்கிலாந்தில் இந்தியா ‘ஏ’ மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிகள் 2 போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி பெக்கன்ஹாமில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா ‘ஏ’ 133, வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ 383 ரன்கள் எடுத்தன. இந்திய அணி 2வது இன்னிங்சில் 609 ரன்களுக்கு ‘டிக்ளேர்’ செய்தது. 360 ரன்கள் இலக்குடன், 2வது இன்னிங்சை துவக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேம்பெல் (44), ஜெர்மைனி பிளாக்வுட் (61) ஓரளவு கைகொடுத்தனர். கடைசி கட்டத்தில் கார்ன்வால் (40) நிலைத்து நிற்க, 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி 2வது இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 245 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து போட்டி ‘டிரா’ ஆனது.
இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி நாளை டான்டனில் துவங்குகிறது.
