இலங்கை அகதிகள் பற்றியும், இலங்கையில் நடந்த உள்நாட்டு போர் பற்றியும் உருவாகி உள்ள படம் சாட்சிகள் சொர்க்கத்தில். ஈழன் இளங்கோவன் இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது:
‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ ஒரு நடப்பியலுக்கு மாறுபட்ட தன்மையுடைய கதை பாணியில் அமைக்கப்பட்ட படம். இலங்கை படையினரால் துன்புறுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டவர்கள், அகதிகளாய் அயல் நாடுகளில் வாழ்பவர்கள் ஆகியோரின் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவான படம்.
2009ல் இலங்கை படையினரால் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட பிரபாகரனின் புதல்வன் பாலச்சந்திரன், பாடகியும் உடகவியளாளரும், நடிகையுமான இசைப்ரியா ஆகியோரின் இழப்பை கருவாக கொண்டு உருவான கதை. பாலச்சந்திரனின் வேடத்தில் எனது மகன் சத்யா இளங்கோ நடித்துள்ளார். கற்பழிப்பு கட்சிகளோ, கொலை கட்சிகளோ துன்புறுத்தல் கட்சிகளோ இத்திரைப்படத்தில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, இருப்பினும், அதைவிட ஆழமான உணர்வுகளையும் வலியையும் அடக்கியுள்ளது இத்திரைப்படம்.
ஆஸ்திரேலியாவிலும் , பிரான்ஸ் நாட்டிலும் படமாக்கப்பட்ட இப்படத்தின் தொழில்நுட்ப வேலைப்பாடுகள் தமிழ் நாட்டு திரைக் கலைஞர்களால் செய்யப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்கு சதிஷ் வர்ஷன் இசையமைத்துள்ளார். ஆஸ்திரேலிய£ , பிரான்ஸ் நாட்டில் வாழும் தமிழ் நடிகர்கள் நடித்துள்ளனர். என்றார் ஈழன் இளங்கோ.