சமீப காலங்களாக இலங்கை அணி போராடி வந்தாலும் மிகச்சமீபமாக பாகிஸ்தானை டெஸ்ட் தொடரில் வீழ்த்தியதை மறந்து ஹர்பஜன் சிங் அந்த அணியை கேலி செய்து ட்வீட் செய்து பிறகு என்ன காரணத்தினாலோ அதனை நீக்கி விட்டார்.
அஸ்வின், ஜடேஜாவை எதிர்கொள்ளத் தயார் என்று இலங்கை வீரர் திமுத் கருண ரத்னே கூறியதற்கு பதில் அளிக்கும் விதமாக, ஹர்பஜன் தன் ட்வீட்டில், ஜிம்பாப்வேயிடம் தோல்வியடைந்தனர். இலங்கை அணி அதன் தாழ்வான காலக்கட்டத்தில் உள்ளது. அந்த அணி விரைவில் புதுப்பித்துக் கொண்டு சர்வதேச தரத்துக்கு வருவார்கள் என்று ட்வீட் செய்திருந்தார். ஆனால் என்ன காரணத்தினாலோ அந்த ட்வீட்டை அவர் சிறிது நேரத்திலேயே நீக்கி விட்டார்.
இலங்கை அணியை ஹர்பஜன் சிங் முதல் முறையாகக் கிண்டல் செய்யவில்லை, ஸ்டீவ் ஸ்மித் தலைமை ஆஸ்திரேலிய அணியை ஒருமுறை கேலி செய்த போது ஹர்பஜன் சிங், “மஞ்சள் சீருடையில் இலங்கை அணி” என்று குறிப்பிட்டதும் கவனத்துக்குரியது.

