என்னமோ நடக்குது, அச்சமின்றி படங்களை இயக்கிய ராஜபாண்டி இயக்கும் படம் கள்ளபார்ட், அரவிந்த்சாமி, ரெஜினா, ஹரிஷ் பெரடி, ஆதேஷ், பாப்ரிகோஷ், பேபி மோனிகா நடிக்கிறார்கள். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார், நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைக்கிறார். மூவிங் பிரேம்ஸ் சார்பில் எஸ்.பார்த்தி, சீனா இணைந்து தயாரிக்கிறார்கள். படப்பிடிப்பு இறுதி கட்டத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து இயக்குனர் ராஜபாண்டி கூறியதாவது:
வித்தியாசமான கதைக் களம் கொண்ட கள்ள பார்ட் ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த படத்திற்காக ஏவிஎம் ஸ்டூடியோவில் பிரமாண்டமான மூன்று விதமான அரங்குகள் அமைக்கப்பட்டு 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. படத்தின் முக்கியமான காட்சிகள், ஆக்ஷன் காட்சிகள் சென்ட்டிமென்ட் காட்சிகள் படமாக்கப்பட்டது. அரவிந்த்சாமி ரெஜினா காட்சிகள் பெரும்பகுதி படமாக்கப்பட்டது. இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடைபெற உள்ளது என்றார்.