சிவப்பு மஞ்சள் பச்சை படத்திற்கு பிறகு உற்சாகமாகிவிட்டார் சித்தார்த். அதற்கு பிறகு வெளிவந்த அருவம் பெரிய அளவில் பேசப்படாவிட்டாலும் சித்தார்த்தை ஆக்ஷன் ஹீரோவாக தூக்கி பிடித்தது. அடுத்து இந்தியன் 2வில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். அவர் நடித்து முடித்துள்ள சைத்தான் கே பச்சா, டக்கர் படங்கள் வெளிவர வேண்டியது இருக்கிறது.
இந்த நிலையில் புதுமுக இயக்குனர் அமிர்தராஜ் என்பவர் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதில் சித்தார்த் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஹீரோயினாக நடிக்க தர்பார் புகழ் நிவேதா தாமஸ், பிரியங்கா ஜாவல்கர் ஆகியோரிடம் பேச்சு நடந்து வருகிறது. இதன் படப்பிடிப்புகள் பிப்ரவரி மாதம் தொடங்குகிறது. முறையான அறிவிப்புகள் இந்த மாதம் இறுதியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

