லட்சுமி, மா போன்ற சர்ச்சையான குறும்படங்களை இயக்கிய சர்ஜன், நயன்தாராவை கொண்டு ஒரு படத்தை இயக்கி வருகிறார்.
கதாநாயகியை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தை அறம், குலேபகாவலி படங்களை தயாரித்த கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டப்பாடி ராஜேஷ் தயாரிக்கிறார். தலைப்பு வைக்காமல் படப்பிடிப்பு வளர்ந்து வரும் நிலையில் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.
படத்திற்கு ஐரா என பெயரிடப்பட்டுள்ளது. நயன்தாரா, இரண்டு விதமான தோற்றத்தில் இருக்கிறார். ஒன்றில் நயன்தாரா சாதாரமாகவும், மற்றொன்றில் கருப்பாகவும் இருக்கிறார்.
இதுவரை நடித்திராத இரட்டை வேடங்களில் நடிக்கிறார் நயன்தாரா. “ஐரா” என்ற வார்த்தை யானையை குறிக்கும், யானை பலத்தை குறிப்பிடும் ஒரு கதாபாத்திரத்தை மையமாக கொண்டு இருக்கும் இந்த படம் ஹாரர் படமாக தயாராகிறது என்கிறார் தயாரிப்பாளர் ராஜேஷ்.
வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வரும் ஐரா, கிறிஸ்துமஸ் பண்டிகையில் ரிலீஸாக இருக்கிறது.

