பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண். தந்தையைப் போன்றே, அவரும் தமிழ் சினிமாவில் பாடகராகவும், நடிகராகவும் பணியாற்றிள்ளார். மேலும், தனது கேப்பிடல் பிலிம் வொர்க்ஸ் நிறுவனத்தின் சார்பாக, சில படங்களையும் தயாரித்திருக்கிறார். அவரது தயாரிப்பில் வெளிவந்த மழை, ஆரண்ய காண்டம், நாணயம் போன்ற பல படங்கள் வெற்றி பெற்றன. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த, சென்னை 28 மற்றும் சென்னை 28- பாகம் 2 ஆகிய திரைப்படங்களையும் எஸ்.பி.பி.சரணே தயாரித்திருந்தார்.
சினிமாவில் பல துறைகளில் பங்காற்றியுள்ள எஸ்.பி.பி.சரண், தற்போது இயக்குநராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். அதிகாரம் என்று பெயரிடப்பட்டுள்ள வெப் சீரிஸை அவர் இயக்கவிருக்கிறார். இந்த வெப் சீரிஸை, அவரது தந்தையும்; பாடகருமான எஸ்.பி.பாலசுப்ரமணியம் தயாரிக்கிறார்.
கேபிள் சங்கர் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள இந்த வெப் சீரிஸிற்கு, தீனா தேவராஜன் இசையமைத்துள்ளார். மேலும், ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதையடுத்து, இந்த வெப் சீரிஸுக்கான முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.

