நான்காவது ஒருநாள் போட்டியின் போது, இந்திய ரசிகர் ஒருவர், தன்னிடம் இனவெறியுடன் நடந்து கொண்டதாக, இம்ரான் தாகிர் புகார் தெரிவித்தார்.
இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதிய நான்காவது ஒருநாள் போட்டி, ஜோகனஸ்பர்க்கில் நடந்தது. இப்போட்டியில் வாய்ப்பு கிடைக்காத தென் ஆப்ரிக்க ‘சுழல்’ வீரர் இம்ரான் தாகிர், வீரர்களுக்கு தேவையான தண்ணீர் உள்ளிட்ட உதவிகளை அவ்வப்போது கொண்டு சென்று வந்தார்.
அப்போது, கேலரியில் இருந்த இந்திய ரசிகர் ஒருவர், தாகிரிடம் ஏதோ கூற, இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதுகுறித்து மைதான பாதுகாவலர்களிடம் தாகிர் தெரிவித்தார். பின் தன்னுடன் வந்த காவலர்களிடம், சம்பந்தப்பட்ட ரசிகரை, தாகிர் அடையாளம் காட்ட, அவர் சம்பவ இடத்தில் இருந்து அகற்றப்பட்டார்.
இதுகுறித்து தென் ஆப்ரிக்க கிரிக்கெட் போர்டு, தற்போது விசாரணையை துவக்கியுள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது ‘பேஸ்புக்கில்’ வெளி வந்துள்ளது.