விஜய் டி.வியின் காமெடி நிகழ்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர்கள் ஹீரோவாவது வரலாறு. சந்தானம், சிவகார்த்திகேயன், மா.பா.கா.ஆனந்த், வரிசையில் இப்போது கலக்க போவது யாரு ராமரும் இணைந்திருக்கிறார்.
மதுரை பக்கம் சொந்த ஊர். நாடகங்களில் காமெடி செய்து அப்படியே சின்னத்திரைக்கு வந்தவர் ராமர். கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் தனது அதிரடி காமெடியால் உலகம் முழுவதும் ரசிகர்களை வைத்திருக்கிறார். அவ்வப்போது சினிமாவிலும் காமெடி செய்து வந்தார்.
சூப்பர் டாக்கீஸ், அவதார் புரொடக்ஷன் என்ற நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் போடா முண்டம் என்ற படத்தில் ராமர்தான் ஹீரோ. இதனை மணி ராம் என்பவர் இயக்குகிறார். நாயகியாக நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி நடிக்கிறார். படப்பிடிப்பு வேகமாக வளர்ந்து வருகிறது.
கடந்த பல வருடங்களுக்கு முன்பு தலையில்லாத முண்டம் நடமாடுவதாக ஆங்காங்கே செய்திகள் வந்து பரபரப்பை கிளப்பியது. இந்த சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படத்தை உருவாக்குகிறார்கள். இதில் பகலில் சதாரண மனிதனாகவும், இரவில் தலையில்லாத முண்டமாகவும் நடிக்கிறார் ராமர். இது அதிகாரபூர்வ தகவல் அல்ல. படத் தயாரிப்பிலிருந்து கசிந்த தகவல்.

