தன்னை பேபி என்று அழைக்க வேண்டாம் என மீனாவின் மகள் நைனிகா விஜய்யிடம் தெரிவித்துள்ளாராம். அட்லீ இயக்கத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்த தெறி படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை மீனாவின் மகள் நைனிகா. முதல் படத்திலேயே ரசிகர்களுக்கு பிடித்த பேபியாகிவிட்டார்.
அவரை அனைவரும் தெறி பேபி என்றே அழைக்கிறார்கள். படத்தில் நைனிகா விஜய்யை பேபி என்றும், விஜய் அவரை பேபி என்றும் அழைத்தார்கள். படத்தில் மட்டும் அல்ல நிஜத்திலும் விஜய் நைனிகாவை பேபி என்று தான் அழைப்பாராம். அண்மையில் நடந்த விருது வழங்கும் விழாவில் விஜய் நைனிகாவை பார்த்து பேபி என்று அழைத்துள்ளார். அதற்கு நைனிகாவோ, அங்கிள் நான் பேபி இல்லை இனி அப்படி அழைக்காதீங்க என்றதாம்.