ஜெமினி படத்தின் மூலம் கடந்த 2002ல் கதாநாயகியாக தமிழில் அறிமுகம் ஆனவர் நடிகை கிரண். அதன்பின், வின்னர், வில்லன், திருமலை, அன்பே சிவம் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். ஆனாலும், அவருக்கு தொடர்ச்சியான பட வாய்ப்புகள் இல்லை. இருந்த போதும், சமீபத்தில் வெளியான ஆம்பள படத்திலும் அவர் நடித்திருந்தார்.
முப்பத்தெட்டு வயதான கிரண், தற்போது, சரியான பட வாய்ப்புகள் இல்லாததால், கதாநாயகிக்கு அம்மா வேடத்தில் நடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார். இருந்த போதும், அவர் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்பதில் தீராத காதலுடன் இருக்கிறார். இதனால், அவ்வபோது, கவர்ச்சியை அள்ளி விட்டு, போட்டோ ஷூட் நடத்தி, அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை வாடிக்கையாக்கி இருக்கிறார். இருந்த போதும், பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் விரக்தியில் இருக்கும் கிரண், படங்களை வெளியிடுவதை மட்டும் நிறுத்தவில்லை. புத்தாண்டை முன்னிட்டு, அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் கொஞ்சம் தூக்கல் ரகம். அந்த படங்களை பார்க்கும் ரசிகர்கள், இந்த வயசுல போய் ஏம்மா இப்படியெல்லாம் செய்றீங்கன்னு கேட்டு, நடிகை கிரணை திட்டித் தீர்க்கின்றனர்.

