இந்திய அளவில் அதிக பட்ஜெட்டில் தயாரான முதல் படம் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த எந்திரன். அதன்பிறகு அந்த பட்ஜெட்டை ராஜமவுலியின் பாகுபலி படம் முறியடித்தது. தற்போது ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 படம் ரூ. 550 கோடியில் தயாரிக்கப்பட்டு இந்திய அளவில் அதிக பட்ஜெட்டில் தயாராகியுள்ள படமாக முதலிடம் பிடித்துள்ளது.
அதேபோல், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாகியுள்ள 2.0 படம் இந்திய அளவில் மட்டும் 6500 தியேட்டர்களில் வெளியாகி உள்ளன. இதுவரை எந்த படமும் இந்திய அளவில் இவ்வளவு தியேட்டர்களில் வெளியானதில்லை. அந்த வகையில், இது பெரிய சாதனை என்கிறார்கள்.
திரைக்கு வருவதற்கு முன்பே 10 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்ட படமாகவும் 2.0 சாதனை செய்திருக்கிறது.