இந்தியன் 2 படத்திற்கான செட் அமைக்கும் வேலைகள் பூஜையுடன் துவங்கின. கமல் – ஷங்கர் கூட்டணியில் 22 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியன் 2 உருவாகிறது. தற்போது படப்பிடிப்புக்கு முந்தைய பணிகள் துவங்கி உள்ளன. முதல்பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திலும் கமல், இரண்டு வேடங்களில் நடிக்க உள்ளார்.
இன்றைய அரசியல் சூழலுக்கு ஏற்றபடி, படத்தின் கதைக்களம் அமைய இருக்கிறது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ள நிலையில் இந்தியன் 2 படத்திற்கான செட் அமைக்கும் பணிகள் பூஜையுடன் துவங்கி உள்ளன. ஆர்ட் டைரக்டர் முத்துராஜ் இந்த பணிகளை மேற்கொள்கிறார். அவர், டுவிட்டரில் இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.
2.0 படத்திற்கு பிறகு இந்தியன் 2 படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். நயன்தாரா அல்லது காஜல் அகர்வால் அல்லது இருவருமே நடிக்கலாம் என தெரிகிறது.

