இந்தியன் 2 படம் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்திலும் நடிகர் கமலும், இயக்குநர் ஷங்கரும் இணைந்திருக்கின்றனர். ஏற்கனவே, கடந்த 1996ல் இந்தியன் படம் எடுக்கப்பட்டபோது, அந்தப் படத்தில் சமூகப் பிரச்னையான ஊழலை மையமாக வைத்து இந்தியன் தாத்தா கேரக்டரில் நடிகர் கமல் மிகச் சிறப்பாக நடித்திருந்தார்.
தற்போது, இந்தியன் 2 படத்தில், அந்த கேரக்டரை மட்டும் மையமாக வைத்துக் கொண்டாலும், படத்தின் கதையை புதிதாக மாற்றி படமாக்கி வருகின்றனர். காஜல் அகர்வால் உள்ளிட்ட பல பிரபலங்களும் படத்தில் நடித்து வருகின்றனர். காலில் செய்த அறுவை சிகிச்சையால் ஓய்வில் இருக்கிறார் கமல்.
இந்நிலையில், இந்தியன் 2 என்ற பெயரில், சமூக வலைதளங்களில் போஸ்டர்கள் வெளியாகி இருக்கின்றன. அவை போலியானவை என, படக் குழுவினர் தெரிவித்திருக்கின்றனர். ஆர்வக் கோளாறில், ரசிகர்கள் விளம்பரங்களையெல்லாம் கூட போலியாக தயாரிக்கின்றனரே என படக் குழுவினர் அதிர்ச்சி தெரிவிக்கின்றனர்.

