ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு சென்னையைத் தொடர்ந்து தற்போது ராஜமுந்திரியில் நடைபெற்று வருகிறது. கமலுடன் காஜல் அகர்வால், ரகுல்பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இப்படத்தில் ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அனில் கபூர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஷங்கர் – அனில் கபூர் சந்தித்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன. இதனால் இந்த செய்தி உண்மையாக இருக்கலாம் என தெரிகிறது.
ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன் நடிப்பில் வெளியான ‛முதல்வன்’ படத்தின் ஹிந்தி ரீ-மேக்கான ‛நாயக்’ல் அனில் கபூர் நடித்தது குறிப்பிடத்தக்கது.

