நடிகர் கமல்ஹாசன், தீவிர அரசியலில் ஈடுபட தொடங்கிவிட்டார். தனது கட்சியான மக்கள் நீதி மையத்திற்கு சமீபத்தில் தேர்தல் ஆணையமும் அங்கீகாரம் அளித்தது.
தமிழ் நாட்டில் ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனி கொள்கை பாடல்கள் இருக்கிறது. அந்தவகையில் கமலின் கட்சிக்கும் தனி பாடல் உருவாகி உள்ளது. இது நம்மவர் படை என்று ஆரம்பிக்கும் இப்பாடலை கவிஞர் சினேகன் எழுதியுள்ளார். தாஜ்நூர் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் பாடலை கமல்ஹாசன் இன்று(ஜூன் 25) கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

