இலங்கையின் முக்கியமான கிரிக்கெட் விளையாட்டு மைதானமான காலே கிரிக்கெட் மைதானத்தில் வரும் நவம்பருக்குப் பிறகு சர்வதேசப் போட்டிகள் நடைபெறாது எனவும், அதில் உள்ள காலரிகள் இடிக்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. கடந்த 2004ல் சுனாமி தாக்கியதில் இந்த மைதானம் சேதமடைந்தது.
அதன்பிறகு புதிய காலரி உள்ளிட்டவை கட்டப்பட்டன. இந்த நிலையில் மீண்டும் இந்த மைதானம் இடிக்கப்பட உள்ளதாக இலங்கை அரசு கூறியுள்ளது.
இந்த மைதானத்தில் 1998ல் இருந்து இங்கு பல்வேறு சர்வதேசப் போட்டிகள் நடந்துள்ளன. 2010ல் இலங்கையின் முத்தையா முரளிதரன் இந்த மைதானத்தில்தான் 800வது விக்கெட்டை வீழ்த்தினார்.
ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே, 500வது டெஸ்ட் விக்கெட்டை இந்த மைதானத்தில்தான் வீழ்த்தினார்.
இந்த மைதானம் இலங்கை அணிக்கு மிகவும் ராசியான மைதானமாகவும் பார்க்கப்படுகிறது. தற்போது தென்னாப்பிரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையே நடந்து வந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை 278 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
