அஜீத்தின் விஸ்வாசம் படத்தில் டி.இமான் கொடுத்த கண்ணான கண்ணே என்ற பாடல் கடந்த ஆண்டின் சூப்பர் ஹிட் பாடலாக அமைந்தது. அதையடுத்து தற்போது ரஜினி168வது படத்திற்கும் இசையமைக்கும் வாய்ப்பினை அவர் பெற்றிருக்கிறார்.
இந்தநிலையில், ஜீவா நடித்துள்ள சீறு படத்திற்கும் இசையமைத்துள்ள டி.இமான், நேற்று இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தபோது அதில் கலந்து கொண்டார். அப்போது பார்வையற்ற மாற்றுத்திறனாளி பாடகர் திருமூர்த்தி என்பவரை இந்த படத்தில் பாடகராக அறிமுகம் செய்திருப்பதாக சொன்னார்.
அதோடு கண்ணான கண்ணே பாடலை பாடி அவர் சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்த வீடியோவை பார்த்த பிறகுதான் அவர் என் கவனத்துக்கு வந்தார். அதன்பிறகு அவரை அழைத்து இந்த பாடல் பாடும் வாய்ப்பினை கொடுத்தேன். அவர் மட்டுமின்றி ராஜ கணபதி என்ற பாடகரையும் இந்தபடத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன். இவர்களுடன் சங்கர் மகாதேவனின் மகன் சிவம் மகாதேவனும் ஒரு பாடல் பாடியிருக்கிறார். மேலும், என்னைப்பொறுத்தவரை என்னுடைய இசைக்கூடாரத்திற்கு வரும் எல்லா பாடகர்களையும் ஒரே கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறேன். அந்த வகையில் எனக்கு திருமூர்த்தி, ராஜகணபதியைப் போன்றுதான் சங்கர் மகாதேவனின் மகன் சிவம் மகாதேவனும். கலைஞர்களில் நான் வித்தியாசம் பார்ப்பதில்லை என்றார் டி.இமான்.

