இங்கிலாந்திற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள 18 பேர் கொண்ட இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் குழாம் கடந்த முதலாம் திகதியன்று இங்கிலாந்து நோக்கி பயணமானது.
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்டிருந்த கழக மட்ட வளர்ந்து வரும் அணிகளுக்கிடையிலான தொடரில் சிறந்த ஆற்றல்களை வெளிக்காட்டிய வீரர்கள் பலருக்கும் இங்கிலாந்துக்கு பயணமாகவுள்ள இலங்கை வளர்ந்துவரும் குழாத்தில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதில் துனித் வெல்லாலகே, யசிரு ரொட்ரிகோ ஆகிய பாடசாலை மாணவர்கள் இருவருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளமை கவனிக்கத்தக்க விடயமாகும்.
எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை இங்கிலாந்தில் விளையாடவுள்ள இலங்கை வளர்ந்து அணிக்கு இரண்டு அணித்தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 4 நாட் கொண்ட இலங்கை வளர்ந்து வரும் அணிக்கு நிப்புன் தனஞ்சயவும், இருபதுக்கு 20 அணிக்கு தனஞ்சய லக்சானும் அணித்தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை வளர்ந்து வரும் குழாம் விபரம்
நிபுன் தனஞ்சய ( 4 நாட்கள் அணித் தலைவர்), தனஞ்சய லக்சான் (இருபதுக்கு 20 அணித் தலைவர்), லசித் குருஸ்புள்ளே, அவிஷ்க பெரேரா, சந்தோஷ் குணதிலக, அவிஷ்க தரிந்து, நுவனிந்து பெர்னாண்டோ , நிஷான் மதுஷ்க, அஷேன் பண்டார , துனித் வெல்லாலகே, திலும் சுதீர, அஷெ்ய்ன் டேனியல் , நிபுன் மாலிங்க, நிபுன் ரன்சிக்க, மானெல்கர் டி சில்வா, யசிரு ரொட்ரிகோ , உதித் மதுஷான் , அம்ஷி டி சில்வா