கர்நாடக இசை முதல் ராப் பாடல்கள் வரை எல்லாவிதமான பாடல்களையும் பாடும் திறமை படைத்தவர் இந்தியாவின் இசைக்குயில் என அழைக்கப்படும் ஆஷா போஸ்லே. அவருக்கு வயது 80. இந்த வயதிலும் தன்னுடைய காந்தக் குரலால் பலரையும் வசியப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
இந்தியாவின் பதினோரு மொழிகளில் தன்னுடைய குரலால் 12 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்கள் பாடி அசத்திய அந்தப் பெண்மணிக்கு, இங்கிலாந்தின் சல்போர்டு பல்கலைக் கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி அவரை கவுரவித்திருக்கிறது.
இதை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஆஷா போஸ்லே தெரிவித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து, அவருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.

