ஆஷஸ் டெஸ்ட் வரலாற்றின் முதல் பகலிரவு டெஸ்டில், ஆஸ்திரேலிய வீரர் கவாஜா, அரைசதம் அடித்தார்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா 1–0 என, தொடரில் முன்னிலையில் உள்ளது.
இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் இன்று அடிலெய்டில் துவங்கியது. கடந்த 135 ஆண்டு கால ஆஷஸ் வரலாற்றில், முதல் முறையாக பகலிரவு போட்டியாக இது நடக்கிறது. இதில் ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர், பான்கிராப்ட் ஜோடி துவக்கம் கொடுத்தது. பான்கிராப்ட் (10) ரன் அவுட்டானார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வார்னர், இம்முறை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர், 102 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து, ‘வோக்ஸ்’ வேகத்தில் சிக்கினார்.
வோக்ஸ் ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்த கவாஜா, 44 ரன் எடுத்த போது கொடுத்த ‘கேட்ச்சை’, ஸ்டோன்மேன் நழுவவிட்டார். வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட கவாஜா, டெஸ்ட் அரங்கில் 9வது அரைசதம் எட்டினார். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்திருந்தது.