அட்டக்கத்தி, மெட்ராஸ், காலா, கபாலி படங்களை இயக்கிய பா.ரஞ்சித், முதன் முறையாக ஆல்பத்தை இயக்கி உள்ளார். மகிழ்ச்சி என்ற டைட்டிலை கொண்ட இந்த நடன ஆல்பத்திற்கு, சாண்டி நடனம் அமைத்துள்ளார். பா.ரஞ்சித் நடத்திய காஸ்ட்லெஸ் கலெக்ஷன் நிகழ்ச்சிக்கு இசை அமைத்த தென்மா இசை அமைத்துள்ளார். சத்யன், சூர்யன் இசை அமைத்துள்ளார். ஸ்டோனி பிசிகோ, டாப்டெப்பி, அறிவு, லோகன் ஆகியோர் பாடல்களை எழுதி உள்ளனர். இதில் 8 பாடல்கள் உள்ளன.
நடிகர்கள் கலையரசன், லிங்கேஷ், ஹரி மற்றும் நடன இயக்குனர் சாண்டி ஆடியுள்ளனர். இது யூ டியூப்பில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. தனது நீலம் புரொடக்ஷன் சார்பில் பா.ரஞ்சித் இந்த ஆல்பத்தை தயாரித்து, இயக்கி உள்ளார்.

