Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ஆர்.கே.மீது பண மோசடி புகார்

March 12, 2020
in Cinema
0
ஆர்.கே.மீது பண மோசடி புகார்

எல்லாம் அவன் செயல், வைகை எக்ஸ்பிரஸ், புலிவேஷம் உள்பட பல படங்களில் நடித்தவர் ஆர்.கே. பாலாவின் அவன் இவன் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். தற்போது இவர் மீது பணமோசடி புகார் கூறப்பட்டுள்ளது. திருப்பூரைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் திருப்பூர் போலீஸ் சூப்பிரண்டிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதவாது:

நான் எலெக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறேன். ஜெகஜீவன்ராம் என்பவர் எனக்கு பழக்கமானார். பிரபல நடிகர் ஆர்.கே. என்ற ராதாகிருஷ்ணன் வைகை எக்ஸ்பிரஸ் என்ற படம் தயாரிப்பதாகவும் அவருக்கு நண்பராகிவிட்டால் சினிமாவில் நுழையலாம் என்று கூறி என்னை சென்னைக்கு அழைத்து சென்று அறிமுகப்படுத்தி வைத்தார்.

அப்போது ஆர்.கே. என்னிடம், வைகை எக்ஸ்பிரஸ் படத்துக்கான ஆயிரம் ரூபாய் கூப்பனை ஜெகஜீவன் ராமிடம் கொடுத்து அனுப்புவதாகவும், படம் ரிலீஸ் ஆகும்போது அந்த கூப்பனை 1500க்கு விற்பனை செய்யலாம். இதன் மூலம் கூப்பனுக்கு 500 ரூபாய் உங்களுக்கு லாபம் கிடைக்கும் என்றும் கூறினார்.

6 லட்சம் ரூபாய் கொடுத்து 600 கூப்பன்களை வாங்கினேன். இதன் பின்னர் இந்த படம் திருப்பூரில் உள்ள தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. ஆனால் அந்த படத்தின் டிக்கெட் 50 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. இதனால் அந்த கூப்பன்களை விற்பனை செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தேன். எனவே என்னிடம் சினிமா கூப்பன்களை கொடுத்து 6 லட்சம் மோசடி செய்த நடிகர் ஆர்.கே. என்ற ராதாகிருஷ்ணன் மற்றும் ஜெகஜீவன்ராம் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Previous Post

நடிகர் சங்க விவகாரம் – நீதிமன்றத்துக்கு கட்டுப்படுவோம்: கே.பாக்யராஜ்

Next Post

விஷால் ஒரு பொறுக்கி – மிஷ்கின் ஆத்திரம்

Next Post

விஷால் ஒரு பொறுக்கி - மிஷ்கின் ஆத்திரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures