நயன்தாரா நடித்த அறம் படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் கோபி நயினார். சமூக கருத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து அறம் 2-வை, கோபி நயினார் எடுக்க போவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், அறம் 2-க்கு முன்பாக புதிய படம் ஒன்றை இயக்குகிறார் கோபி. இதில், ஆர்யா ஹீரோவாக நடிக்கிறார். வட சென்னையை மையப்படுத்தி இந்தப்படம் உருவாக இருக்கிறது. மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. அனைத்தும் முடிவானதும் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளனர்.
